என் பாலைவன வானில் புத்தம்புது சூரியன் நீ!
உன் புதிரான வாழ்வின் மொத்தத்திற்குமான அர்த்தம் நான் !!
நானே ஒரு கவிதை...என்னையே கவி கிறுக்க வைத்தாய்,
கனாக்களிலும் இடைவேளை இல்லாமல் , என்னை ஏன் மொய்த்தாய்?
அணை கட்ட நினைப்பதற்குள் உள்ளத்து ஆசை வேள்ளமாயிற்று..
நாளைகளின் பயங்களும், நேற்றைகளின் காயங்களும் இல்லாமல் போயிற்று..
தன்னந்தனியாய் சிரிக்கிறேன்..
நடக்கும்போதே மிதக்கிறேன்..
எதிர்காலத்திற்கு பயணிக்கிறேன்..
நிகழ்காலத்தில் செயலிழக்கிறேன்..
உன்னையே நினைக்கிறேன்..
உறங்கவும் மறக்கிறேன்..
இப்படியாய் இன்பச்சிரை கட்டிவிட்டுச் சென்றாய்...ஆனால்
என்னை ஏன் அழைத்துச் செல்லவில்லை , உன்னுடன் ஒன்றாய்?
நீயும் கூட இவையெல்லாம் சொல்லிட முயல்கிறாயோ ?
அதனால் தான் என்மூலம் மொழிபெயர்த்து பயில்கிறாயோ?
இப்படியே தனியாய் புலம்பவைத்து விடாதே என்னன்பு காதலா...!
கற்பனையில் மட்டுமே முத்தமிட்டுக்கொள்ள நமதென்ன கனாக்காதலா?!


