எங்கிருந்து புறப்பட்டாய்
எதற்கென தோன்றினாய்
எப்பொழுது என் கண்ணில் விழுந்தாய்
எத்தருணத்தில் மீண்டு எழுந்தாய்
எங்கெங்கோ விரட்டினாய், நெருங்க சொல்லி மிரட்டினாய்
தாகங்கள் தந்தாய், தீர்க்கவென்று முன்னே வந்தாய்
உடன் நடந்தாய், நான் இட்ட தடை கடந்தாய்
நினைப்பில் கடை விரித்தாய், மல்லிப்பூ மனம் பறித்தாய்
தீவிரமாய் படை எடுத்தாய், கட்டி வைத்து ஒழுக்கம் கெடுத்தாய்
'என்னடா நினைப்பு உனக்கு?' என்றேன்
'உன் நினைப்பு மட்டும் தான்' என்றாய்
கவிதையாய் தான் பேசுகிறாய், அழகனாய் இருக்கிறாய்
ஐயோ..எந்த கொள்ளியிட்டு கொளுத்த
இந்த பாழாய்ப்போன இயலாமையை.....
