Thursday, May 17, 2012

சிறகொடிந்த தழும்பு..






மழை தூவி ஓய்ந்த சாலை..
குளித்து சிரிக்கும் மஞ்சள் மாலை..
மண் வாசம் கலந்த காற்று..
இன்றலர்ந்த சுகந்த மலர்கள்..
சலனமில்லாத நீரோடை..
வீடு திரும்பும் தூரத்து பறவை..
தனித்து நான், துணையாய் வெளிர் நீல வான்!
அழகாய் கழியவேண்டிய ரம்மியமான பொழுதுகளில் எல்லாம்
இதயத்தின் ஏதோவொரு இருண்ட மூலையில் 
உன் நினைவுகள் கசிந்து, வழிந்து கொண்டேதான் இருக்கிறது...
ஒடிந்த சிறகின் தழும்பில் இருந்து கசியும் ரத்தம் போல! 
தேக்கிய மழைத்துளிகளை சேமிக்க இயலாமல் சொட்டித் தீர்க்கும் 
உலர்ந்த மர இலையைப் போல நானும் தோற்றதாகவே உணர்கிறேன்....