நீலவான் கூட விநாடியேனும் வெளுத்திருக்கும்
கடல் அலை கூட சற்றேனும் ஓய்ந்திருக்கக் கூடும்
நேரம் கூட விடாமல் ஓடுவதை ஒரு கணம் மறந்திருக்கக் கூடும்
பூமி கூட சுழன்றுகொண்டே இருக்க சற்று சலித்திருக்கும்
என் மனம் மட்டும் நிறுத்தாமல் உன்னை நினைத்துக்கொண்டே இருக்கிறது
கடல், வான், பூமி, நேரம், காலம் இவை யாவும் கடந்த உன் நினைப்பை
அசாதாரணமாக ஒரு பார்வை மட்டுமே வீசி கொடுத்துவிட்டுப் போகிறாய்
உன் சாம்பல் நிறக் கண்கள் என்ன நினைவு உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையா ?
பூவில் தேன் தேடி சுவைக்கும் வண்டு நீயடா
பாலைவனத்தில் சிக்குண்ட நீர் தேடும் பறவை நானடா

No comments:
Post a Comment